Screen Reader Access     A-AA+
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு - 631210, திருவள்ளூர் .
Arulmigu Vadaranyeeswarar Temple, Tiruvalangadu - 631210, Tiruvallur District [TM001518]
×
Temple History

தல பெருமை

1. மூவலர் ஆலமரத்தின்கீழ் சுயம்புவாகத் தோன்றியதால் வடாரணயேஸ்வரர் எனப்போற்றப்படுகிறார் வடம் - ஆலமரம், ஆரண்டம் - காடு ஆலங்காட்டு இறைவர் என்று போற்றப்படுகிறார். தேவர்கள் வழிபட்டதால் தேவர் சிங்க பெருமாள் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. 2. நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் முதல் சபையான இரத்தின சபையை உடையது. 3. நடராஜர் இரத்தின சபாபதீஸ்வரர் காளியுடன் போட்டியிட்டு ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய தலம். இடது பாதம் காதோடு உயரத்தூக்கியும், எட்டு திருக்கரங்களுடனும் நடராஜர் எழுந்தருளி திருவருள் புரிந்து வருகிறார். 4. நடராஜர் அம்மன் சிவகாம சுந்தரி இங்கு நாட்டியம் கண்டு வியந்த கோலத்தில் இடது கரம் ஆச்சர்யம் படுவது போல் இருக்கிறார். அம்பிகையின் திருநாமம், சட்சீனாம்பிகை அருகிருந்து வியந்த நாயகி என்பதாகும். 5....