தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் 15-ஆவதாக வைத்துப் போற்றுப்படும் திருத்தலம். சிவபெருமான் திருநடனம் புரியும் சபைகளுள் இங்கு அமைந்துள்ள இரத்தின சபையே முதற் சபை ஆகும். இங்கு இறைவன் உயரத் தூக்கிய திருவடியுடன் எண்தோள்கள் வீசி நின்று ஊர்த்துவ தாண்டவம் புரிகிறார். கால்களால் நடக்க அஞ்சிய காரைக்கால் அம்மையார், தலையால் நடந்து ஆடல் வல்லானின் திருவடிக்கீழ் என்றும் இருக்கும் பேறுபெற்ற மூத்த திருப்பதிகம் பாடிய முதன்மைத் திருத்தலம் இதுவாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திரனின் 46 கல்வெட்டுக்களையும், மூன்று குவிண்டால் எடை கொண்ட 31...